search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வங்காள தேசம் பாகிஸ்தான் கிரிக்கெட்"

    வங்காள தேசத்திற்கு எதிராக பாகிஸ்தான் அணி 2014-ம் ஆண்டிற்கு முன் 32 போட்டிகளில் 31 வெற்றிகளை ருசித்த நிலையில், தற்போது தடுமாறி வருகிறது. #AsiaCup2018 #BANvPAK
    பாகிஸ்தான், இந்தியா, இலங்கை, வங்காள தேசம், ஆப்கானிஸ்தான், ஹாங் காங் ஆகிய 6 அணிகள் பங்கேற்ற ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் ஐக்கிய அரபு எமிரேட்ஸில் நடைபெற்று வருகிறது. ஒருநாள் கிரிக்கெட்டில் பாகிஸ்தான், இந்தியா, இலங்கை அணிகள் நீண்ட காலமாக ஆதிக்கம் செலுத்தி வருகின்றன. வங்காள தேசம் மற்றும் ஆப்கானிஸ்தான் வளர்ந்து வரும் அணிகள் என்பதால் அவ்வப்போது பெரிய அணிகளுக்கு அதிர்ச்சி அளிக்கும்.

    நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் பாகிஸ்தானை வங்காள தேசம் 37 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி வெற்றி பெற்றது. இதன்மூலம் 3-வது முறையாக இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளது.

    இந்தியா - பாகிஸ்தான், ஆஸ்திரேலியா - இங்கிலாந்து இடையிலான ஆட்டம் எவ்வளவு முக்கியமானதாக கருதப்படுகிறதோ, அதேபோல் பாகிஸ்தான் - வங்காள தேச அணிகள் இடையிலான ஆட்டம் முக்கியமானதாக கருதப்படுகிறது.

    ஆரம்ப கால கட்டத்தில் வங்காள தேசத்திற்கு எதிரான ஆட்டத்தில் பாகிஸ்தான் எளிதில் வெற்றி பெற்று விடும். தற்போது பாகிஸ்தான் கடும் சவாலை சந்திக்க வேண்டியுள்ளது.



    1986-ம் ஆண்டு முதல் 2014 வரை பாகிஸ்தான் - வங்காள தேசம் இடையில் 32 போட்டிகள் நடைபெற்றன. இதில் 25 போட்டிகளில்  தொடர்ச்சியாக வெற்றி பெற்ற பாகிஸ்தான் 31 வெற்றிகளை ருசித்தது. ஒரு போட்டியில் மட்டுமே தோல்வியை சந்திதது.

    ஆனால் 2015-க்குப் பிறகு பாகிஸ்தான் நிலைமைய தலைகீழாக மாறியுள்ளது. 2015 முதல் நேற்று வரை நான்கு போட்டிகளில் மோதியுள்ளன. இந்த நான்கிலும் பாகிஸ்தான் தோல்வியை சந்தித்துள்ளது.
    வங்காள தேசத்திடம் தோல்வியடைந்து இறுதி வாய்ப்பை இழந்த பாகிஸ்தான், பயிற்சியில் அதிக கவனம் செலுத்த வேண்டும் என்று அப்ரிடி வலியுறுத்தியுள்ளார். #AsiaCup2018
    ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் இந்தியா - வங்காள தேசம் அணிகள் மோதின. இந்த போட்டியில் வெற்றி பெற்றால்தான் இறுதிப் போட்டிக்கு முன்னேற இயலும் என்ற நிலையில் இரு அணிகளும் பலப்பரீட்சை நடத்தின.

    முதலில் பேட்டிங் வங்காள தேசம் 239 ரன்கள் எடுத்து ஆல்அவுட் ஆனது. பின்னர் 240 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பாகிஸ்தான் களம் இறங்கியது. பாகிஸ்தான் அணியால் 50 ஓவரில் 9 விக்கெட் இழப்பிற்கு 202 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. இதனால் பாகிஸ்தான் 37 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்து இறுதிப் போட்டி வாய்ப்பை இழந்தது.

    வங்காள தேசம் அணியிடம் தோல்வியடைந்து பாகிஸ்தான் அணிக்கு முன்னாள் அதிரடி பேட்ஸ்மேன் ஷாகித் அப்ரிடி ‘டுவிட்டர்’ மூலம் அறிவுரை வழங்கியுள்ளார்.

    அப்ரிடி தனது டுவிட்டர் பக்கத்தில் ‘‘வங்காள தேச அணிக்கு வாழ்த்துக்கள். அனைத்து துறையிலும் பாகிஸ்தான் அணியின் செயல்பாடு ஏமாற்றம் அளித்தது. மைதானத்தில் ஆக்ரோசமான ஆட்டம் அனைத்து துறைகளிலும் மிஸ். கடந்த தொடரில் இளம் வீரர்களை கொண்ட பாகிஸ்தான் அணி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. இதனால் அணி மீது அதிக அளவில் எதிர்பார்ப்பு இருந்தது. திரும்பவும் நல்ல நிலைக்கு திரும்பி பயிற்சி ஆட்டத்தின் மீது அதிக கவனம் செலுத்த வேண்டும்’’  என பதிவிட்டுள்ளார்.
    முஷ்பிகுர் ரஹிம், முகமது மிதுன் அரைசதங்களால் பாகிஸ்தான் வெற்றிக்கு 240 ரன்கள் இலக்காக நிர்ணயித்துள்ளது வங்காள தேசம். #AsiaCup2018 #BANvPAK
    ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டியில் இந்தியாவுடன் மோதுவது யார் என்பதை நிர்ணயிக்கும் போட்டியில் பாகிஸ்தான் - வங்காள தேசம் அணிகள் மோதி வருகின்றன. டாஸ் வென்ற வங்காள தேசம் பேட்டிங் தேர்வு செய்தது. பாகிஸ்தான் அணியில் முகமது அமிர் நீக்கப்பட்டு ஜுனைத் கான் சேர்க்கப்பட்டிருந்தார். வங்காள தேச அணியில் ஷாகிப் அல் ஹசன் இடம்பெறவில்லை.

    லிட்டோன் தாஸ், சவுமியா சர்கார் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள். சவுமியா சர்கார் ரன்ஏதும் எடுக்காமல் ஜுனைத் கான் பந்தில் ஆட்டமிழந்தார். லிட்டோன் தாஸ் 6 ரன்னில் ஜுனைத் கான் பந்திலும், அடுத்து வந்த மொமினுல் ஹக்யூ 5 ரன்னில் ஷஹீன் அப்ரிடி பந்திலும் அடுத்தடுத்து வெளியேறினார்கள்.

    இதனால் வங்காள தேசம் 12 ரன்கள் எடுப்பதற்குள் முதல் மூன்று விக்கெட்டுக்களையும் இழந்தது. 4-வது விக்கெட்டுக்கு முஷ்பிகுர் ரஹிம் உடன் முகமது மிதுன் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி வங்காள தேசத்தை சரிவில் இருந்து மீட்டது. இவரும் சிறப்பாக விளையாடி அரைசதம் அடித்தனர்.

    வங்காள தேச அணியின் ஸ்கோர் 156 ரன்னாக இருக்கும்போது இந்த ஜோடி பிரிந்தது. முகமது மிதுன் 60 ரன்கள் எடுத்த நிலையில் வெளியேறினார். இருவரும் இணைந்து 4-வது விக்கெட்டுக்கு 144 ரன்கள் குவித்து அணியை மீட்டனர்.



    அதன்பின் வந்த இம்ருல் கெய்ஸ் 9 ரன்னில் வெளியேறினார். 7-வது வீரராக மெஹ்முதுல்லா களம் இறங்கினார். அரைசதம் அடித்த முஷ்பிகுர் ரஹிம் சதத்தை நோக்கி முன்னேறினார். 99 ரன்கள் அடித்த நிலையில் துரதிருஷ்டவசமாக ஷஹீன் அப்ரிடி பந்தில் ஆட்டமிழந்தார். 7-வது விக்கெட்டுக்கு மெஹ்முதுல்லா உடன் மெஹிதி ஹசன் ஜோடி சேர்ந்தார்.

    இருவரும் அடித்து விளையாடி விரும்பினார்கள். ஆனால் மெஹித் ஹசன் 11 பந்தில் 12 ரன்கள் எடுத்த நிலையில் ஜுனைத் கான் பந்தில் ஆட்டமிழந்தார். மெஹ்முதுல்லா 25 ரன்கள் எடுத்த நிலையில் வெளியேறினார். 49-வது ஓவரில் இரண்டு விக்கெட்டுக்களை இழக்க வங்காள தேசம் 48.5 ஓவரில் 239 ரன்கள் எடுத்து ஆல்அவுட் ஆனது.

    இதனால் பாகிஸ்தானுக்கு 240 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்துள்ளது. பாகிஸ்தான் அணியின் ஜூனைத் கான் நான்கு விக்கெட்டுக்களும், ஷஹீன் அப்ரிடி, ஹசன் அலி தலா இரண்டு விக்கெட்டுக்களும் வீழ்த்தினார்கள்.
    ×